இடுகைகள்

எங்க ஊர் மக்களின் நாட்டுப் பற்று

எங்கள் ஊர் உடுமலைப்பேட்டை, ரொம்ப சின்ன ஊராகத் தான் இருந்தது. ஆனாலும் , தேச பக்திக்கு பெயர் போனது . பின்னால், கோவை மாவட்டத்திற்கே உரிய அதி வேகத் தொழில் வளர்ச்சியால், இப்பொழுது ரொம்பவும் வளர்ந்து விட்டது. நகரின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய தொழிற்சாலையான பழனி ஆண்டவர் மில்ஸ் காந்தி யடிகளால் அடிக்கல் நாட்டப் பட்டதாம் . சின்ன ஊராக இருந்த போதே, தேசத் தலைவர்களின் நினைவாக ஒவ்வொரு இடத்திற்கும் பெயர் வைத்திருந்தார்கள். அவற்றில் சில: நேதாஜி மைதானம் - பெரிய விளையாட்டுப் போட்டிகள் இங்குதான் நடைபெறும் . காந்தி சவுக் - நகரின் மையப் பகுதி . நேரு வீதி - வ . உ . சி . வீதி : நகரின் குறுக்கே செல்லும் மிகவும் பரபரப்பான வீதிகள் . சர்தார் வீதி - சர்தார் வல்லபபாய் படேல் நினைவாக ஒரு முக்கிய வீதி . காந்தி நகர் - ஒரு பெரிய காலனி இப்பொழுதோ, ரியல் எஸ்டேட்காரர்கள், தங்கள் பெயரையும், தங்கள் குழந்தைகளின் பெயரையும் தான் வீதிகளுக்கும், காலனிகளுக்கும் வைக்கிறார்கள்!

கோயிஞ்சாமிக்கு பெண்பால் என்ன ?

பலரது நீண்ட நாள் சந்தேகத்தை ஒரு அன்பர் தனது Blog-இல் தெளிவு படுத்தி இருக்கிறார்: கோயிஞ்சாமிக்கு பெண்பால் என்ன என்ற நமது மண்டையைக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு அன்பரது பதில்: goin-din't-see-me புரியாத அன்பர்களுக்கு நமது பதவுரை: "கோயிஞ்சாமி" யை அப்படியே ஆங்கிலத்தில் எழுதினால் பின் வரும் சொல் வரும்: goin-saw-me இதன் எதிர்ப் பதம், அதாவது பெண் பால்: goin-din't-see-me என்று வருமாம். ஆனாலும், எனது simple மொழியில் இப்படிச் சொல்லலாம்: go-in-sami க்கு எதிர்: come - out- sami எப்பூடீ ....

கன்னி மாங்கா

நம்மூரு பக்கத்துலெ கன்னி மாங்கா ன்னு சொல்லுவோமே, அதுலெ எப்டி ஊறுகா போட்றதுன்னு ஒரு அக்கா இங்க சொல்லியிருக்காங்க. இந்த மாங்கா புளிக்கும்னு இந்தக்கா சொல்றாக. எனக்கு தெரிஞ்சு நம்ம திருமூர்ததி மலையிலெ கெடைக்குமே, நாம கூட மணுவு கணக்குலெ வாங்கிட்டு வருவொமெ, அந்தக் காய் புளிப்பே இருக்காது. என்னமோ நீங்கதான் சொல்லோணும். பெறவு, எங்கம்மா அதுலெ ஊறுகா போட்டாங்கண்ணா அவங்க கைப் பக்குவதுக்கு வருஷக் கணக்குலெ கெடாமெ இருக்கும். இப்போ எங்கம்மாவும் இல்லெ, நாங்களும் சென்னைலெ செட்டில் ஆயிட்டோம். இப்போ பழய ஞாபகம் மட்டுந்தான் ...

கோயிஞ்சாமியும் சர்தார்ஜியும்

சோகத்ததிலும் நம்ம கோயிஞ்சாமிக்கு குசும்பு: 2008....உலகளாவிய நிதி சுனாமியில் கோயிஞ்சாமி வேலை செய்த கம்பெனியும் தப்பவில்லை. அந்த மாதம் அவனது கம்பெனியில் சம்பளம் பட்டுவாடா ஒரு 10 நாள் தாமதம். எல்லோரும் சோகமே உருவாக வந்து போய்க் கொண்டிருந்தனர். கோயிஞ்சாமியின் டிபார்ட்மென்டில் ஒரு சர்தார்ஜியும் இருந்தார். அவரது செல் போனுக்கு வங்கியிலிருந்து SMS வந்தது: Your account no. ***** has been credited with salary Rs. *****.** From: *** Bank சர்தார்ஜிக்கு ஒரே குஷி! உடனே எல்லோரையும் alert செய்து விட்டார்! ஹேய் சம்பளம் வந்து விட்டது! இதோ SMS என்று எல்லோருக்கும் காட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது இரவு 12 மணி! எல்லோருக்கும் ஒரு சந்தேகம். இரவு 12 மணிக்கு எப்படி credit செய்தார்கள்? சர்தார்ஜியைக் கேட்டால், காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அவருக்கு கடன் கொடுத்தவரை எல்லாம் போனில் கூப்பிட்டு சொல்லி விட்டார். காலையில் வந்து பணம் வாங்கிக் கொள்ளசொல்லி!! ஆனால் அவரைத் தவிர வேறு ஒருவருக்கும் இந்த alert வரவில்லை! காரணம் - இன்னும் உண்மையில் சம்பளமே வரவில்லை!!! எப்படி? இங்கு தான் நம்ம கோயிஞ்சாமி

கும்பகோணத்தில் கோயிஞ்சாமி

படம்
'சனி நீராடு' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதாவது சேர்ந்தார்ப்போல் வரும் சனி ஞாயிறு விடுமுறையில் ஏதேனும் தீர்த்தயாத்திரை செல்வாயாக! தண்ணீர்ப்பஞ்ச சென்னையிலிருந்து விடுபட்டு சனி நீராடுவாயாக என்று சொன்னது இதையே குறிக்கும். அப்படியான சனி ஒன்றில் நீராடும் பொருட்டு கோயிஞ்சாமி3 சென்னையை விட்டு கும்பகோணத்தின் அருகில் இருக்கும் திருவலஞ்சுழிக்குச் சென்றான். அங்கே இப்போது என்ன விசேஷம் என்பது வேறு விஷயம். திருவலஞ்சுழிக்கோயிலில் களப்பணி நேரம் கோயிஞ்சாமி தூங்கிக்கொண்டு காககி குருவிகளை எண்ணிக்கொண்டு இருந்தது வெத்தான விஷயம். ஆனால் மதியம் உணவு நேரம் கோயிஞ்சாமி சென்ற உணவகமே சத்தான விஷயம். பணியகத்தை நினைவு படுத்தும் (தூக்கம்தான்) உணவை முடித்துவிட்டு, காலாற நண்பர்களுடன் சாலையில் நடந்துகொண்டிருந்தான் கோயிஞ்சாமி. எதேச்சையாக ஒரு மளிகைக்கடையைப் பார்த்ததும் கோயிஞ்சாமியே சிரிக்கும் ஒரு காட்சி கண்ணில் பட்டது. மளிகைக் கடையில் கம்ப்யூட்டர் வைத்து பில்! பக்கத்தில் இருந்த கும்பகோணத்து நண்பரிடம் சொல்லியே விட்டான் கோயிஞ்சாமி. "ஹா ஹா. கும்பகோணத்துல இப்படி ஒரு ஹை-டெக் மளிகைக்கடையா? சபாஷ், சபாஷ்&

கோயிஞ்சாமியும் அரசியலும்

கோயிஞ்சாமி மிகவும் பெருமிதமடைந்தும் மகிழ்ச்சியாகவும் இருந்தான். தி ஹிந்து நாளிதழைப் புரட்டிப்பார்க்கும் போது அப்படியொரு செய்தி அவனது கண்ணில் பட்டது. தலைப்புச் செய்தியாக வந்த அந்த வரியை எப்படியோ எழுத்துக்கூட்டிப் படித்து முடித்ததும் கொயிஞ்சாமிக்குத் தலைகால் புரியவில்லை. வந்திருந்த செய்தி இதுதான்: RSS delivers stern message to BJP கோயிஞ்சாமி பொதுவாகவே விஷயஞானம் அதிகம் உள்ளவனாதலால் பி.ஜே.பி என்பது ஒரு இந்திய அரசியல் கட்சி என்பதை மிகவும் சுலபமாகக் கண்டுபிடித்து விட்டான். இந்த அரசியல் கட்சி வலைப்பதிவுகளைப் படிப்பது வருவதும் அந்த வரியில் இருந்து கோயிஞ்சாமிக்குப் புரிந்தது. தலைப்புச் செய்தியைப் படித்ததுமே புரிந்து விட்டது, ஏதோ ஒரு வலைப்பதிவாளர் ஒரு கடினமான கோரிக்கையை முன்வைத்து வலைப்பதிவு எழுதி இருக்கிறார் என்று. அதாவது நாட்டு மக்கள் இடும் வலைப்பதிவுகளை எல்லாம் ஒரு இந்தியக் கட்சி படித்துவருகிறது. அப்படிப் படிக்க ஏதோ ஒரு ஆர்.எஸ்.எஸ் ரீடரைப் பயன்படுத்துகிறது. ஒரு இந்தியக்குடிமகனின் வலைப்பதிவுக்கான RSS ஒரு கடினமான வேண்டுகோளை முன்வைத்துள்ளது. என்ன ஒரு கட்சி பி.ஜே.பி! இப்படி கட்சிக்குள் தகவல்தொடர்

வீட்டில் நீங்கள் என்னெல்லாம் செய்கிறீர்கள்?

இப்படியொரு கஷ்டம் இருக்கமுடியும் என்று எதிர்பார்க்கவேயில்லை கோயிஞ்சாமி. கடந்த சில மாதங்களாக கோயிஞ்சாமி ஒரு தொலைக்காட்சித் தொடருக்குக் கதை, வசனம் எழுதி வருவது நீங்கள் அறிந்ததே. எந்தப் புதிய பணியை ஒப்புக்கொண்டாலும் ஆர்வமும் அக்கறையுமாக உழைக்கும் கோயிஞ்சாமியாகப்பட்டவன், இந்தப் பணியையும் அவ்வண்ணமே மேற்கொண்டான். ஆனால் எதிர்பாராத ஒரு பிரச்னையால், தான் எழுதிக்கொண்டிருந்த 254வது காட்சியின்போது துவண்டுபோய் நேற்றிரவு தரையில் விழுந்தான். அவனது கணினி அநாமதேயமாக இரவெல்லாம் அப்படியே எழுத ஆளில்லாமல் காத்துக்கிடந்தது என்று பிடிஐ செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது. கோயிஞ்சாமியின் பிரச்னைதான் என்ன? ஒரு தொடர் என்றால் அதில் நான்கு அல்லது ஐந்து வீடுகள், அந்தந்த வீட்டு மனிதர்கள் , அவர்களின் கதைகள் என்று தான் நகரும். காட்சிகள் பெரும்பாலும் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும். இதற்குப் பல்வேறு பொருளாதாரக் காரணங்கள் உண்டென்பதை கோயிஞ்சாமி அறிவான். ஆனால் வீட்டுக்குள் ஒவ்வொரு காட்சி தொடங்கும்போதும் சம்பந்தப்பட்ட பாத்திரங்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்? இங்கேதான் கோயிஞ்சாமி மாட்டிக்கொண்டான். பத்து முறை சாப்பிட்டுக்