எங்க ஊர் மக்களின் நாட்டுப் பற்று
எங்கள் ஊர் உடுமலைப்பேட்டை, ரொம்ப சின்ன ஊராகத் தான் இருந்தது. ஆனாலும், தேச பக்திக்கு பெயர் போனது.
பின்னால், கோவை மாவட்டத்திற்கே உரிய அதி வேகத் தொழில் வளர்ச்சியால், இப்பொழுது ரொம்பவும் வளர்ந்து விட்டது.
நகரின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய தொழிற்சாலையான பழனி ஆண்டவர் மில்ஸ் காந்தியடிகளால் அடிக்கல் நாட்டப் பட்டதாம்.
சின்ன ஊராக இருந்த போதே, தேசத் தலைவர்களின் நினைவாக ஒவ்வொரு இடத்திற்கும் பெயர் வைத்திருந்தார்கள்.
அவற்றில் சில:
நேதாஜி மைதானம் - பெரிய விளையாட்டுப் போட்டிகள் இங்குதான்நடைபெறும்.
காந்தி சவுக் - நகரின் மையப் பகுதி.
நேரு வீதி - வ.உ.சி. வீதி: நகரின் குறுக்கே செல்லும் மிகவும் பரபரப்பானவீதிகள்.
சர்தார் வீதி - சர்தார் வல்லபபாய் படேல் நினைவாக ஒரு முக்கிய வீதி.
காந்தி நகர் - ஒரு பெரிய காலனி
இப்பொழுதோ, ரியல் எஸ்டேட்காரர்கள், தங்கள் பெயரையும், தங்கள் குழந்தைகளின் பெயரையும் தான் வீதிகளுக்கும், காலனிகளுக்கும் வைக்கிறார்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக