இடுகைகள்

ஜனவரி, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கும்பகோணத்தில் கோயிஞ்சாமி

படம்
'சனி நீராடு' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதாவது சேர்ந்தார்ப்போல் வரும் சனி ஞாயிறு விடுமுறையில் ஏதேனும் தீர்த்தயாத்திரை செல்வாயாக! தண்ணீர்ப்பஞ்ச சென்னையிலிருந்து விடுபட்டு சனி நீராடுவாயாக என்று சொன்னது இதையே குறிக்கும். அப்படியான சனி ஒன்றில் நீராடும் பொருட்டு கோயிஞ்சாமி3 சென்னையை விட்டு கும்பகோணத்தின் அருகில் இருக்கும் திருவலஞ்சுழிக்குச் சென்றான். அங்கே இப்போது என்ன விசேஷம் என்பது வேறு விஷயம். திருவலஞ்சுழிக்கோயிலில் களப்பணி நேரம் கோயிஞ்சாமி தூங்கிக்கொண்டு காககி குருவிகளை எண்ணிக்கொண்டு இருந்தது வெத்தான விஷயம். ஆனால் மதியம் உணவு நேரம் கோயிஞ்சாமி சென்ற உணவகமே சத்தான விஷயம். பணியகத்தை நினைவு படுத்தும் (தூக்கம்தான்) உணவை முடித்துவிட்டு, காலாற நண்பர்களுடன் சாலையில் நடந்துகொண்டிருந்தான் கோயிஞ்சாமி. எதேச்சையாக ஒரு மளிகைக்கடையைப் பார்த்ததும் கோயிஞ்சாமியே சிரிக்கும் ஒரு காட்சி கண்ணில் பட்டது. மளிகைக் கடையில் கம்ப்யூட்டர் வைத்து பில்! பக்கத்தில் இருந்த கும்பகோணத்து நண்பரிடம் சொல்லியே விட்டான் கோயிஞ்சாமி. "ஹா ஹா. கும்பகோணத்துல இப்படி ஒரு ஹை-டெக் மளிகைக்கடையா? சபாஷ், சபாஷ்...

கோயிஞ்சாமியும் அரசியலும்

கோயிஞ்சாமி மிகவும் பெருமிதமடைந்தும் மகிழ்ச்சியாகவும் இருந்தான். தி ஹிந்து நாளிதழைப் புரட்டிப்பார்க்கும் போது அப்படியொரு செய்தி அவனது கண்ணில் பட்டது. தலைப்புச் செய்தியாக வந்த அந்த வரியை எப்படியோ எழுத்துக்கூட்டிப் படித்து முடித்ததும் கொயிஞ்சாமிக்குத் தலைகால் புரியவில்லை. வந்திருந்த செய்தி இதுதான்: RSS delivers stern message to BJP கோயிஞ்சாமி பொதுவாகவே விஷயஞானம் அதிகம் உள்ளவனாதலால் பி.ஜே.பி என்பது ஒரு இந்திய அரசியல் கட்சி என்பதை மிகவும் சுலபமாகக் கண்டுபிடித்து விட்டான். இந்த அரசியல் கட்சி வலைப்பதிவுகளைப் படிப்பது வருவதும் அந்த வரியில் இருந்து கோயிஞ்சாமிக்குப் புரிந்தது. தலைப்புச் செய்தியைப் படித்ததுமே புரிந்து விட்டது, ஏதோ ஒரு வலைப்பதிவாளர் ஒரு கடினமான கோரிக்கையை முன்வைத்து வலைப்பதிவு எழுதி இருக்கிறார் என்று. அதாவது நாட்டு மக்கள் இடும் வலைப்பதிவுகளை எல்லாம் ஒரு இந்தியக் கட்சி படித்துவருகிறது. அப்படிப் படிக்க ஏதோ ஒரு ஆர்.எஸ்.எஸ் ரீடரைப் பயன்படுத்துகிறது. ஒரு இந்தியக்குடிமகனின் வலைப்பதிவுக்கான RSS ஒரு கடினமான வேண்டுகோளை முன்வைத்துள்ளது. என்ன ஒரு கட்சி பி.ஜே.பி! இப்படி கட்சிக்குள் தகவல்தொடர்...

வீட்டில் நீங்கள் என்னெல்லாம் செய்கிறீர்கள்?

இப்படியொரு கஷ்டம் இருக்கமுடியும் என்று எதிர்பார்க்கவேயில்லை கோயிஞ்சாமி. கடந்த சில மாதங்களாக கோயிஞ்சாமி ஒரு தொலைக்காட்சித் தொடருக்குக் கதை, வசனம் எழுதி வருவது நீங்கள் அறிந்ததே. எந்தப் புதிய பணியை ஒப்புக்கொண்டாலும் ஆர்வமும் அக்கறையுமாக உழைக்கும் கோயிஞ்சாமியாகப்பட்டவன், இந்தப் பணியையும் அவ்வண்ணமே மேற்கொண்டான். ஆனால் எதிர்பாராத ஒரு பிரச்னையால், தான் எழுதிக்கொண்டிருந்த 254வது காட்சியின்போது துவண்டுபோய் நேற்றிரவு தரையில் விழுந்தான். அவனது கணினி அநாமதேயமாக இரவெல்லாம் அப்படியே எழுத ஆளில்லாமல் காத்துக்கிடந்தது என்று பிடிஐ செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது. கோயிஞ்சாமியின் பிரச்னைதான் என்ன? ஒரு தொடர் என்றால் அதில் நான்கு அல்லது ஐந்து வீடுகள், அந்தந்த வீட்டு மனிதர்கள் , அவர்களின் கதைகள் என்று தான் நகரும். காட்சிகள் பெரும்பாலும் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும். இதற்குப் பல்வேறு பொருளாதாரக் காரணங்கள் உண்டென்பதை கோயிஞ்சாமி அறிவான். ஆனால் வீட்டுக்குள் ஒவ்வொரு காட்சி தொடங்கும்போதும் சம்பந்தப்பட்ட பாத்திரங்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்? இங்கேதான் கோயிஞ்சாமி மாட்டிக்கொண்டான். பத்து முறை சாப்பிட்டுக்...

அமேரிக்கா பிரசண்டு

இதக்கேட்டீங்ளா? அமேரிக்கா பிரசண்டு ஒபாமண்ணன் மறுக்கா ஒரு விஸ்கா பதவிப் பிரமாணம் எடுத்துகிட்டாராம். மொத தடவ அவிங்க பெரிய நாட்டாமை ஏதோ ஒரு பழமய தப்பாச்சொல்லி, அதயே நம்ப ஒபாமண்ணனும் திருப்பிச்சொல்லீட்டாராம். அதுனால, அதுக்கு மறாநாளு, மறுக்கொரு விஸ்கா கரைட்டாச்சொல்லி பதவிப் பிரமாணம் எடுத்துகிட்டாராம்.