இடுகைகள்

மார்ச், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கன்னி மாங்கா

நம்மூரு பக்கத்துலெ கன்னி மாங்கா ன்னு சொல்லுவோமே, அதுலெ எப்டி ஊறுகா போட்றதுன்னு ஒரு அக்கா இங்க சொல்லியிருக்காங்க. இந்த மாங்கா புளிக்கும்னு இந்தக்கா சொல்றாக. எனக்கு தெரிஞ்சு நம்ம திருமூர்ததி மலையிலெ கெடைக்குமே, நாம கூட மணுவு கணக்குலெ வாங்கிட்டு வருவொமெ, அந்தக் காய் புளிப்பே இருக்காது. என்னமோ நீங்கதான் சொல்லோணும். பெறவு, எங்கம்மா அதுலெ ஊறுகா போட்டாங்கண்ணா அவங்க கைப் பக்குவதுக்கு வருஷக் கணக்குலெ கெடாமெ இருக்கும். இப்போ எங்கம்மாவும் இல்லெ, நாங்களும் சென்னைலெ செட்டில் ஆயிட்டோம். இப்போ பழய ஞாபகம் மட்டுந்தான் ...

கோயிஞ்சாமியும் சர்தார்ஜியும்

சோகத்ததிலும் நம்ம கோயிஞ்சாமிக்கு குசும்பு: 2008....உலகளாவிய நிதி சுனாமியில் கோயிஞ்சாமி வேலை செய்த கம்பெனியும் தப்பவில்லை. அந்த மாதம் அவனது கம்பெனியில் சம்பளம் பட்டுவாடா ஒரு 10 நாள் தாமதம். எல்லோரும் சோகமே உருவாக வந்து போய்க் கொண்டிருந்தனர். கோயிஞ்சாமியின் டிபார்ட்மென்டில் ஒரு சர்தார்ஜியும் இருந்தார். அவரது செல் போனுக்கு வங்கியிலிருந்து SMS வந்தது: Your account no. ***** has been credited with salary Rs. *****.** From: *** Bank சர்தார்ஜிக்கு ஒரே குஷி! உடனே எல்லோரையும் alert செய்து விட்டார்! ஹேய் சம்பளம் வந்து விட்டது! இதோ SMS என்று எல்லோருக்கும் காட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது இரவு 12 மணி! எல்லோருக்கும் ஒரு சந்தேகம். இரவு 12 மணிக்கு எப்படி credit செய்தார்கள்? சர்தார்ஜியைக் கேட்டால், காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அவருக்கு கடன் கொடுத்தவரை எல்லாம் போனில் கூப்பிட்டு சொல்லி விட்டார். காலையில் வந்து பணம் வாங்கிக் கொள்ளசொல்லி!! ஆனால் அவரைத் தவிர வேறு ஒருவருக்கும் இந்த alert வரவில்லை! காரணம் - இன்னும் உண்மையில் சம்பளமே வரவில்லை!!! எப்படி? இங்கு தான் நம்ம கோயிஞ்சாமி...