கணினி வல்லுனர்கள்
என் நண்பர் ஒருவர் கர்நாடக இசையில் மிகவும் ஆர்வமுள்ளவர். எம்பி-3 வடிவில் மாற்றி நிறைய பாடல்களைக் கேட்டு மகிழ ஆசை. அதற்காக ஒரு கணினியையும் வாங்கினார். பின் ஒருநாள் அவருடைய இசைப் பெட்டகத்தைக் கேட்க என்னையும் அழைத்தார். அதற்கு முன்னால் தன் music collection பற்றி நிறைய பில்டு அப் கொடுத்தார். PC-யிடம் சென்று அவர் ஒவ்வொன்றாக தடவித்தடவி கிளிக் செய்து கொண்டிருந்ததிலிருந்தே அவருடைய அனுபவ அறிவு புலப்பட்டது. பிறகு ஒரு பாட்டின் கோப்பின்மேல் கிளிக் செய்தார். கர்ஸர் பாட்டுக்கு உடுக்கடித்துக் கொண்டிருந்ததேயன்றி வேறு ஒன்றும் நடக்கக் காணோம். "என்ன இவ்வளவு நேரம் ஆகிறதே" என்று கேட்டதற்கு அவர் "பொதுவாகவே கம்ப்யூட்டரில் அவ்வளவு நேரம் ஆகும்" என்று இப்படி ஒன்றுமே தெரியாத ஞானசூனியத்திடம் பேசவேண்டியிருக்கிறதே என்ற அங்கலாய்ப்புடன் சொன்னார்! இதனிடையே நான் அந்த கம்ப்யூட்டரின் விவரங்களைப் பார்த்தால் அது Pentium-2 processor, 128 mb RAM வீரியம் கொண்ட அதிவேகக் குதிரை என்பது தெரிந்தது. நண்பரிடம், "இது பழைய கான்ஃபிகரேஷனாக இருக்கிறதே, அப்கிரேடு செய்யுங்களேன். ஃபாஸ்டாக இருக்க்கும்" என்று ஆல...